Home 2024
Yearly Archives: 2024
கடந்த 1882-ல் ரூ.20,000 ஆக இருந்த மகா கும்ப மேளா செலவு ரூ.7,500 கோடியாக உயர்வு
மகா கும்ப மேளா கடந்த 1882-ம் ஆண்டு நடைபெற்றபோது, அதன் செலவு ரூ.20,000-மாக இருந்தது. அது தற்போது ரூ.7,500 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்து மதத்தில் மகா கும் பமேளா மிகவும் புனிதமான யாத்திரை. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி என்ற நான்கு நதி களின் கரையோரங்களில் அமைந்துள்ள புனித தலங்களில் கும்ப மேளா நடைபெறுகிறது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக் ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறும் கும்பமேளா வில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து...
தொடர்ந்து 2-வது ஆண்டாக 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கியது அமெரிக்கா
சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு, கல்வி என பல காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியர்கள் ஏராளமானோர் அமெரிக்காவுக்கு விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்க அரசு, விசாவை வழங்கியுள்ளது. இது நிரந்தர குடியுரிமை அல்லாத விசாவாகும். இந்த வகை விசாக்கள் எச்1-பி விசாக்கள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்காண்டுகளாகவே அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை இந்தியர்களுக்கு அமெரிக்க அரசு...
ம.பி.யில் ரயில் சக்கரங்களுக்கு நடுவே 250 கி.மீ. தூரம் பயணித்த நபரிடம் விசாரணை
மத்தியபிரதேசத்தில் ரயிலுக்கு அடியில் சக்கரங்களுக்கு நடுவே ஒருவர் 250 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளார். ம.பி.யின் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளின் கீழ் ரயில்வே ஊழியர்கள் நேற்று வழக்கமான ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு ரயிலில், ஒரு பெட்டியின் கீழே சக்கரங்களுக்கு நடுவில் ஒருவர் மறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அந்த நபர், இடார்சியில் இருந்து 250 கி.மீ. தூரம், அதாவது 4 மணி நேரத்துக்கும் மேலாக இவ்வாறு பயணித்ததாக கூறியதை கேட்டு மேலும்...
மன்மோகன் சிங் மறைவுக்கு கர்நாடகாவில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து கர்நாடக அரசு சார்பில் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று முன் தினம் டெல்லியில் காலமானார். அவரது மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்தகவுடா, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக அரசு விடுத்துள்ள அறிவிப்பில், ''மன்மோகன் சிங் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் டிசம்பர் 27ம்...
மன்மோகன் சிங் மறைவால் களை இழந்த காங்கிரஸ் மாநாடு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் கர்நாடகாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு களை இழந்து காணப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அண்ணல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதன் 100-வது ஆண்டை நினைவுகூறும் வகையில் காங்கிரஸ் சார்பில் 2 நாள் சிறப்பு செயற்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தொடங்கிய மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான...
மன்மோகன் சிங் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி: டெல்லியில் இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். டெல்லி யமுனை நதிக்கரையில் சீக்கிய மத முறைப்படி இன்று காலை முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக சிகிச்சை...
இணையவழி பட்டா மாறுதல் ‘தமிழ் நிலம்’ இணையதளம் 31-ம் தேதி வரை இயங்காது
இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் தமிழ்நிலம் இணையதளம் வரும் டிச.31-ம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிலஅளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவை வழங்கப்படும் ‘தமிழ்நிலம்’ இணையதளத்தில் விவசாயிகள் விவரப் பதிவேடு (Farmer Registry) தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக இன்று (டிச.28) காலை 10 மணி முதல் 31-ம் தேதி மாலை 4 மணி வரை இணையவழி பட்டா...
ஒலி இரைச்சலை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாருக்கு நவீன ‘இயர்பட்ஸ்’ கருவி
போக்குவரத்து போலீஸாருக்கு ஒலி இரைச்சலை தடுக்கும் நவீன ‘இயர்பட்ஸ்’ கருவி அறிமுகம் செய்யப்பட்டு, சோதனை முறையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னையில் தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் சாலைகளில் பயணிக்கின்றன. அந்த வாகனங்களில் இருந்து வரும் சத்தம் 90 முதல் 150 டெசிபல் இருப்பதாக தெரியவருகிறது. இத்தகைய அதிக ஒலி இரைச்சல் அளவுகளை போக்குவரத்து பணிகளில் ஈடுபடும் போலீஸார் தினமும் கேட்பதால், அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல், மிகுந்த மன அழுத்தத்துக்கும் ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீஸார் அதிகப்படியான ஒலி இரைச்சலை தவிர்க்க,...
அரசியல் தொடர்பு, குற்றப் பின்னணியுடன் வலம்வந்த ஞானசேகரன் – செல்போனில் ஆபாச வீடியோக்கள்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கோட்டூர், மண்டபம் சாலை பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் (37) கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளியே வர முடியாதபடி அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.அவரது குற்ற பின்னணி குறித்து பல்வேறு புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:கைதான ஞானசேகரனின் தந்தைக்கு பூர்வீகம் மதுராந்தகம். அவர் அங்கிருந்து பல...
‘பபாசி’ சார்பில் 48-வது சென்னை புத்தக காட்சி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48-வது சென்னை புத்தகக் காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் சென்னை புத்தகக் காட்சி நடத்தப்படும். அந்த வகையில் 48-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று தொடங்கியது.
தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் முன்னிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்து...














