பலுசிஸ்தான் பெண் தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் பாக். வீரர்கள் 200 பேர் பலி – நடந்தது என்ன?

0
10

பாகிஸ்​தானில் பலுசிஸ்​தான் விடு​தலைப் ​படையைச் (பிஎல்ஏ) சேர்ந்த பெண் தீவிர​வா​தி​கள் இரு​வர் தற்​கொலைப் படை தாக்​குதல் நடத்​தி​யுள்​ளனர். இங்கு கடந்த சில நாட்​களாக நடை​பெற்ற மோதலில் பாகிஸ்​தான் வீரர்​கள் 200 பேர் உயி​ரிழந்​த​தாக பிஎல்ஏ தெரி​வித்​துள்​ளது.

பாகிஸ்​தானில் உள்ள பலுசிஸ்​தான் மாகாணத்​தில் தன்​னாட்சி கோரி பிரி​வினை​ வா​தி​கள் போராடி வரு​கின்​றனர். இதனால் அங்கு பலுசிஸ்​தான் விடு​தலைப் படை​யினருக்​கும், பாகிஸ்​தான் பாது​காப்பு படை​யினருக்​கும் இடையே நீண்​ட​கால​மாக மோதல் நடை​பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில் பலுசிஸ்​தானில் தங்​கி​யிருக்​கும் பாகிஸ்​தான் பாதுகாப்பு படை​யினர் மீது இரண்​டாம் கட்ட ‘ஹெ​ராப்’ ஆபரேசன் நடவடிக்​கையை பிஎல்ஏ அமைப்​பினர் கடந்த வாரம் வெள்​ளிக் கிழமை தொடங்​கினர். இந்த தாக்​குதல் 40 மணி நேரத்துக்​கும் மேலாக தொடர்ந்​தது. இந்த தாக்​குதலில் தற்கொலைப் படை பெண்​களை பிஎல்ஏ களம் இறக்​கியது.

‘ஆசிபா மெங்​கல்’ என்ற பெண் தீவிர​வாதி வாக​னத்​தில் வெடிகுண்டு​களை ஏற்​றிச் சென்று நாஸ்கி நகரில் உள்ள பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தலை​மையகம் மீது தாக்​குதல் நடத்தியுள்ளார். இவர் பிஎல்ஏ அமைப்​பில் கடந்த 2023-ம் ஆண்டு சேர்ந்​துள்​ளார். தற்​கொலைப் படை​யில் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் சேர்ந்​துள்​ளார். தீவிர பயிற்சி பெற்​று, தற்​போது ஐஎஸ்ஐ தலை​மையகம் மீது தாக்​குதல் நடத்தி உயி​ரிழந்​துள்​ளார்.

இதே​போல் ஹவா பலூச் என்ற பெண் குவாதர் பகு​தி​யில் தற்​கொலைப் படை தாக்​குதல் நடத்​தி​யுள்​ளார். பலுசிஸ்​தானில் 2 இடங்​களில் பெண் தீவிர​வா​தி​கள் தற்​கொலைப்​படை தாக்​குதல் நடத்​தி​யதை பாகிஸ்​தான் பாது​காப்பு அமைச்​சர் காஜா ஆசிப் உறுதி செய்​துள்​ளார்.

இந்த தாக்​குதல் குறித்து பிஎல்ஏ செய்தித் தொடர்​பாளர் ஜீயந் பலூச் கூறுகை​யில், ”பலுசிஸ்​தானின் கரன், மஸ்​தங், டம்ப் பான்​சி, குவெட்டா மற்​றும் நாஸ்கி ஆகிய இடங்​களில் பிஎல்ஏ தீவிர​வா​தி​கள் 40 மணி நேரத்​துக்​கும் மேலாக தாக்​குதல் நடத்​தினர். இதில் பாகிஸ்​தான் ராணுவம், போலீ​ஸார், எல்லை பாது​காப்பு படை​யினர் என 200-க்​கும் மேற்​பட்ட வீரர்​கள் கொல்​லப்​பட்​டனர். 17 பேர் உயிருடன் பிடிக்​கப்​பட்​டனர்’’ என்​றார்.

ஆனால் பலுசிஸ்​தான் முதல்​வர் சர்​பரஸ் புக்தி கூறுகை​யில், ”பிஎல்ஏ தாக்​குதலில் 17 வீரர்​கள், பொது மக்​கள் 31 பேர் உயி​ரிழந்​தனர்” என்​றார். பாகிஸ்​தான் ராணுவம் கூறுகை​யில் பலுசிஸ்​தானில் நடை​பெற்ற தாக்​குதலில் தீவிர​வா​தி​கள் 133 பேர் கொல்​லப்​பட்​டனர் என்​றார்.

எங்களை பாகிஸ்தான் படை எதிர்கொள்ள முடியாது: பாகிஸ்தான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக ஹவா பலூச் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: ‘பலூச் தேசமே, இன்று உங்களின் சகோதரிகளில் ஒருவர் பஞ்சாபி ராணுவத்தை எதிர்கொள்கிறார். தற்போது பலூச் மக்கள் தைரியத்துடன் போராட முன்வர வேண்டும். நமக்கு வேறு வழியில்லை.

பாகிஸ்தான் நம்மை எதிர்கொள்ள முடியாது. இன்று மகிழ்ச்சியான நாள். நாங்கள் எதிரியை எதிர்கொள்கிறோம். பலுசிஸ்தான் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் கைவிடப்படமாட்டார்கள் என்பதை நாம் எதிரிக்கு தெரிவிப்போம். போர் வேடிக்கையானது. நாங்கள் எதிரிகளுக்காக காத்திருக்கிறோம். எதிரிகள் கோழைகள். அவர்கள் தொலைவில் இருந்து தாக்குதல் நடத்துகின்றனர்.

அவர்களுக்கு நேரில் வர தைரியம் இல்லை. வாங்க, வாங்க, நாங்கள் இன்று உங்களுக்காக காத்திருக்கிறோம். பலூச் பெண் சுதந்திரப் போராட்ட வீரர்களை நீங்கள் இன்று எதிர்கொள்வீர்கள். பலூச் பெண்களை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை இன்று நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு வீடியோ பதிவில் ஹவா பலூச் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here