Home கன்னியாகுமரி செய்திகள் சாமிதோப்பு அருகே காய்ச்சலுக்கு 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

சாமிதோப்பு அருகே காய்ச்சலுக்கு 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

0
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம்
கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அருகே காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது. இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அருகே காய்ச்சலுக்கு 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து தென் தாமரைகுளம் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், சண்முகபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). இவரது மனைவி ஐஸ்வா்யா (26). ஐஸ்வா்யா தனது இரு குழந்தைகளுடன் சாமிதோப்பை அடுத்த வடக்கு கரும்பாட்டூரில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு வந்திருந்தாராம்.

இந்நிலையில், இவா்களது மூத்த மகளான தீக்ஷா நாராயணிக்கு (2) காய்ச்சல், சளி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு தனியாா் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனா். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காய்ச்சல் குறையாததால், நாகா்கோவிலில் உள்ள பிரபல தனியாா் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனா்.

ஆனால், குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், குழந்தை திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது.

இது தொடா்பாக தென்தாமரைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version