கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று கனகமூலம் சந்தை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கேரள லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த மகா ராஜா (வயது 39) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல வடசேரி பஸ் நிலையம் அருகே கேரள லாட்டரி விற்றதாக கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஆபிரகாம் (36) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.