சத்தீஸ்கரில் 6 பெண்கள் உட்பட 10 நக்சலைட்கள் நேற்று சரண் அடைந்தனர். இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் நேற்று கூறியதாவது:
அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் போலீஸ், சிஆர்பிஎப் மற்றும் மாவட்ட அதிகாரிகள் முன்னிலையில் நக்சலைட்கள் சரண் அடைந்தனர். இவர்களை பற்றிய தகவலுக்கு மொத்தம் ரூ.33 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை இவர்கள் ஒப்படைத்துள்ளனர். இதன் மூலம் இம்மாவட்டத்தில் இந்த ஆண்டு மொத்தம் 263 மாவோயிஸ்ட்கள் வன்முறையை கைவிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.







