குலசேகரம்: மாயமான நர்சிங் மாணவி காதலனுடன் திருமணம்

0
222

குமரி மாவட்டம்  வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் மகள் ஸ்ரீதிவ்யா (19). குலசேகரத்தில் உள்ள  தனியார் மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் 2 -ம் ஆண்டு படித்து வருகிறார். பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்தவர் சபீர் (27) அந்த பகுதியில் இறைச்சி வெட்டும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சபீருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஸ்ரீ திவ்யா படித்து வரும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார்.   

அப்போது இருவரும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால், பின்னர் இருவரும் சட்டப்படி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.  

இதற்கிடையில் மகளை காணவில்லை என குலசேகரம் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு செய்து ஸ்ரீதிவ்யாவை தேடி வந்தனர். இதை அடுத்து ஸ்ரீ திவ்யா காதல் கணவர் சபீருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். போலீசார் பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருதரப்பினரும் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here