கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவது தொடர்பாக 5,964 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 4,180 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு, முடிக்கப்பட்டுள்ளது. இதில் 1,300 குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் இந்த பணி முடிவடையும். பின்னர் அவை உரிய நபர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்துள்ளார்.