மார்த்தாண்டம் அருகே உள்ள அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் விஜயன் மகன் வினு (27). இவர் நெடுஞ்சாலை பணி ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 4 மாதங்ள் ஆகியுள்ளது. நேற்று முன்தினம் இரவு வினோ பைக்கில் காட்டாத்துறையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சிராயன்குழி சர்ச் பகுதியில் வந்த போது எதிரே வேகமாக வந்த ஆம்னி பஸ் ஒன்று வினு ஓட்டி சென்ற பைக்கில் மோதி தள்ளியது. இதில் தூக்கி வீசப்பட்ட வினுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி வினு உயிரிழந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














