பெங்களூருவில் ‘சோம்பி’ சர்ச்சை: இளைஞர் கைது

0
23

பெங்​களூரு எலஹங்​காவை சேர்ந்த ஹேமந்த் குமார் ​வெளி​யிட்ட வீடியோ​வில், ‘‘இளைஞர் ஒரு​வர் சாலை​யில் 2 மணி நேரமாக ஒரே இடத்​தில் அசை​யாமல் நிற்​கிறார். அவர் ‘சோம்​பி’ போதைப் பொருளை பயன்​படுத்​தி​ய​தால் உறைந்து போய் இருக்​கிறார்’’ என கூறி​யிருந்​தார். இந்த வீடியோ சர்ச்​சை​யானது.

பெங்​களூரு காவல் ஆணை​யர் சீமந்த் குமார் சிங் உத்​தர​வின்​படி, ‘சோம்​பி’ இளைஞரைப் பிடித்து மருத்​து​வப் பரிசோதனை செய்​தனர். அதில், அவர் மது அருந்​தி​யதும் போதைப் பொருள் பயன்​படுத்​தாததும் தெரிய வந்​தது. இதையடுத்து ஹேமந்த் குமாரை போலீ​ஸார் கைது செய்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here