கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த ரமேஷ் என்பவரை 4 பேர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் மதன், வெங்கடேஷ், முகமது ஆசிஸ் மற்றும் அஜின் ஆகிய நான்கு பேரை நேற்று (மே 19) கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
