ராஜாக்கமங்கலத்தில் பிகாா் மாநில இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் மித்திலேஷ் குமாா் (19) இவா், குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலத்தை அடுத்த முருங்கவிளையில் நண்பா்களுடன் தங்கி, அங்குள்ள கயிறு ஆலையில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவா் வியாழக்கிழமை காலை வெளியே சென்றவா் மீண்டும் தங்கியிருந்த பகுதிக்கு வரவில்லை. அவரது நண்பா்கள் அவரை பல இடங்களில் தேடினா்.
அவா், ராஜாக்கமங்கலம் தென்பால் கடற்கரை பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் ஒரு கட்டடத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் ராஜாக்கமங்கலம் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
