Home சினிமா செய்திகள் “உங்க கதைத் தேர்வு வியக்க வைக்குது!” – சசிகுமாருக்கு ரஜினி பாராட்டு

“உங்க கதைத் தேர்வு வியக்க வைக்குது!” – சசிகுமாருக்கு ரஜினி பாராட்டு

0

’டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்ம் சசிகுமாரை போனில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்.

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் வெளியான படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சசிகுமாரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இது குறித்து சசிகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: “படம் சூப்பர் என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்துக்கு சொல்லவா வேண்டும். ‘அயோத்தி’, ‘நந்தன்’ படம் பார்த்து பாராட்டிய ரஜினி ஹாட்ரிக் பரவசமாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் பார்த்து, சூப்பர் சசிகுமார் என அழுத்திச் சொன்னார்.

‘தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க. சொல்ல வார்த்தையே இல்ல. அந்த அளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க. சமீபகாலமா உங்களோட கதைத் தேர்வு வியக்க வைக்குது சசிகுமார்’ என அவர் சொல்லச் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மனதில் நிறுத்தி, அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக் குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம். தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி” என்று சசிகுமார் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version