குமரி மாவட்டத்தில் நிலவிய கடுமையான வெப்பத்திற்குப் பிறகு, நேற்று இரவு முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்திய கடல்சார் ஆய்வு மையம், நாளை 29ஆம் தேதி இரவு 8.30 மணி வரை நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 2.3 முதல் 2.5 மீட்டர் உயரத்திற்குப் பேரலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.