டபிள்யூபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: மும்பை – பெங்களூரு அணிகள் மோதல்

0
38

டபிள்​யூபிஎல் (மகளிர் பிரீமியர் லீக்) கிரிக்கெட் போட்டி தொடர் மும்​பை​யில் இன்று தொடங்​க​வுள்​ளது. முதல் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யும், ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி​யும் மோதவுள்​ளன.

இந்​தி​யா​வில் ஆடரு​வருக்​கான ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரைப் போலவே மகளிருக்​கும் டபிள்​யூபிஎல் (மகளிர் பிரீமியர் லீக்) உரு​வாக்​கப்​

பட்​டது. 2023-ம் ஆண்டு முதல் நடை​பெற்​று​வரும் இந்​தத் தொடரின் நான்​காவது சீசன் இன்று தொடங்​க​வுள்​ளது.மும்பை இந்​தி​யன்​ஸ், ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு, குஜ​ராத் ஜெயன்ட்​ஸ்,யுபி வாரியர்​ஸ்,டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 5 அணி​கள் இதில் களம் காண்​கின்​றன.

இந்த தொடரில் மும்பை இந்​தி​யன்ஸ் 2 முறை​யும் (2023, 2025), ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு ஒரு முறை​யும் (2024) சாம்​பியன் பட்​டம் பெற்​றன. இப்​போட்​டிகள் ஜனவரி 9-ம் தேதி முதல் பிப்​ர​வரி 5-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளன.முதல் 11 ஆட்​டங்​கள் மும்​பை​யிலும் அடுத்த 11 ஆட்​டங்​கள் வதோத​ரா​விலும் நடை​பெற உள்​ளன. எலிமினேட்​டர் மற்​றும் இறு​திப்​போட்டி வதோத​ரா​வில் நடை​பெற உள்​ளது. 28 நாட்​கள் நடை​பெறும் இந்​தப் போட்டி 22 ஆட்​டங்​களை கொண்​ட​தாக இருக்​கும்.

நவி​மும்​பை​யிலுள்ள டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் இன்று நடை​பெறும் தொடக்​கப் போட்​டி​யில் மும்பை இந்​தி​யன்ஸ் மற்​றும் ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி​கள் மோதுகின்​றன. அனைத்து போட்​டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரலை​யாக காணலாம்​.மேலும்​, டிஜிட்​டல் ஸ்​ட்​ரீமிங்​ ஜியோ ஹாட்​ஸ்​​டாரில்​ மட்​டுமே கிடைக்​கும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here