Home விளையாட்டு செய்திகள் உலக டேபிள் டென்னிஸ்: மணிகா பத்ரா தோல்வி

உலக டேபிள் டென்னிஸ்: மணிகா பத்ரா தோல்வி

0

புதுடெல்லி: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் கால் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தோல்வி கண்டார்.

பிரான்ஸ் நாட்டின் மான்ட்பெல்லியர் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், உலகத் தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மணிகா பத்ரா, சீனாவின் கியன் டியான்யியுடன் மோதினார். இதில் கியன்டியான்யி 11-8, 11-8, 12-10 என்ற செட் கணக்கில் மணிகா பத்ராவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.இந்தத் தொடரில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை ஜா அகுலா, முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version