தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் இணைய வேண்டும்: ஜெர்மனி, இந்திய பிரதமர்கள் கூட்டாக வலியுறுத்தல்

0
16

தீ​விர​வாதத்தை எதிர்த்​துப் போரிட உலக நாடு​கள் இணைய வேண்​டும் என ஜெர்​மனி பிரதமர் மெர்​ஸும், பிரதமர் மோடி​யும் கூட்​டாக வலி​யுறுத்தி உள்​ளனர்.

பிரதமர் நரேந்​திர மோடி​யின் அழைப்பை ஏற்று ஜெர்​மனி பிரதமர் பிரட்​ரிக் மெர்ஸ் 2 நாள் பயண​மாக நேற்று இந்​தியா வந்​தார். அகம​தா​பாத் விமான நிலை​யம் வந்த அவருக்கு அரசு உயர் அதிகாரி​கள் வரவேற்பு அளித்​தனர். பிரதமரான பிறகு அவர் ஆசியா​வுக்கு பயணம் செய்​திருப்​பது இது​தான் முதல்முறை.

கடந்த 10 மற்​றும் 11 தேதி​களில் குஜ​ராத்​தில் உள்ள சோம​நாதர் கோயி​லின் பெரு​விழா​வில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். இந்​நிலை​யில், அகம​தா​பாத்​தில் தேசத் தந்தை மகாத்மா காந்​தி​யால் நிறு​வப்​பட்ட சபர்​மதி ஆசிரமத்​துக்கு நேற்று காலை​யில் பிரதமர் மோடி சென்​றார். சிறிது நேரத்​தில் அங்கு வந்த ஜெர்​மனி பிரதமர் மெர்ஸை வரவேற்​றார். பின்​னர் இரு​வரும் அங்​குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரி​யாதை செலுத்​தினர்.

இதையடுத்​து, ஆசிரமத்​தில் உள்ள ‘சர்க்​கா’ எனப்​படும் நூற்பு சக்கரத்​தைப் பயன்​படுத்தி கதர் நூல் எவ்​வாறு நெய்​யப்​படு​கிறது என்​பதை மெர்ஸ் பார்​வை​யிட்​டார்.

ஆசிரமத்​தில் உள்ள பார்​வை​யாளர்​கள் புத்​தகத்​தில் மெர்ஸ் எழு​திய குறிப்​பில் “சுதந்​திரத்​தின் மீதான நம்​பிக்கை மற்​றும் ஒவ்​வொரு தனிமனிதனின் கண்​ணி​யம் குறித்த மகாத்மா காந்​தி​யின் அசைக்க முடி​யாத நம்​பிக்கை இன்​றும் நமக்கு ஊக்​கமளிக்​கிறது. காந்​தி​யின் போதனை​கள் முன் எப்​போதை​யும் விட இன்று உலகுக்கு அதி​கம் தேவைப்​படும் நிலை​யில், இந்த மரபு இந்​தி​யர்​களை​யும் ஜெர்​மானியர்​களை​யும் நண்​பர்​களாக ஒன்​றிணைக்​கிறது” என குறிப்​பிட்​டுள்​ளார்.

பட்​டம் விடும் திரு​விழா: பின்னர் இரு தலை​வர்​களும் சபர்​மதி நதிக்​கரைக்​குச் சென்​றனர். அங்கு பிரதமர் மோடி சர்​வ​தேசப் பட்​டம் விடும் திரு​விழா-2026-ஐ தொடங்கி வைத்​தார். பின்​னர் அதிபர் மெர்​ஸுடன் இணைந்து பட்​டம் பறக்​க​விட்டு மகிழ்ந்​தார். இந்த நிகழ்ச்​சிகளுக்​குப் பிறகு பிரதமர் நரேந்​திர மோடி​யும், ஜெர்​மன் பிரதமர் பிரட்​ரிக் மெர்​ஸும் சந்​தித்​துப் பேசினர்.

அப்​போது ரஷ்​யா-உக்​ரைன் மோதல், காசா நிலைமை மற்​றும் பிற உலகளா​விய சவால்​கள் குறித்து இரு தலை​வர்​களும் விரி​வாக ஆலோ​சனை நடத்​தினர். அனைத்​துப் பிரச்​சினை​களுக்​கும் அமை​தி​யான முறை​யில் தீர்வு காண்​ப​தையே இந்​தியா எப்​போதும் ஆதரிக்​கிறது என்று பிரதமர் மோடி உறு​திபடத் தெரி​வித்​தார்.

இந்த சந்​திப்​பின்​போது, கல்​வித் துறை​யில் இருதரப்பு உறவு​களை விரிவுபடுத்​து​வதற்கு ஒரு விரி​வான திட்​டத்தை வகுத்​தனர். குறிப்​பாக ஜெர்​மன் பல்​கலைக்​கழகங்​கள் இந்​தி​யா​வில் தங்​களது வளாகங்​களைத் திறக்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்​தார்.

தீவிர​வாதம் குறித்​தும் இரு​வரும் ஆலோ​சித்​தனர். அப்​போது பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதல், டெல்லி கார் குண்டு வெடிப்பு ஆகிய​வற்​றுக்கு கண்​டனம் தெரி​வித்​தனர். மேலும் தீவிர​வாதம் ஒட்​டுமொத்த மனிதகுலத்​துக்​கும் ஒரு கடுமை​யான அச்​சுறுத்​தல் என்​ப​தில் தானும் மெர்​ஸும் உடன்​படு​வ​தாக மோடி கூறி​னார்.

இந்​தி​யா​வும் ஜெர்​மனி​யும் தீவிர​வாதத்​துக்கு எதி​ராக ஒற்​றுமை​யாக நிற்​கும் என்​றும் உலக நாடு​களும் தீவிர​வாதத்தை எதிர்த்​துப் போரிட ஒன்​றிணைய வேண்​டும் என்​றும் அவர் கூறி​னார். இதையடுத்​து, இரு தலை​வர்​களும் இந்​தி​யா-ஜெர்​மனி கார்ப்​பரேட்​ நிறு​வன தலை​மைச்​ செயல்​ அதி​காரி​கள்​ மன்​ற கூட்​டத்​தில்​ கலந்துகொண்​டனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here