சேப்​பாக்​கம் மைதானத்தில் பிப்​.2-ல் உலகக் கோப்பை பயிற்சி ஆட்​டம்

0
71

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தி​யா, இலங்​கை​யில் தொடங்​கு​கிறது. இதில் 20 அணி​கள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோத உள்​ளன. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான பயிற்சி ஆட்​டங்​கள் பிரப்​ர​வரி 2 முதல் 6-ம் தேதி வரை நடை​பெறுகின்றன.

பயிற்சி ஆட்​டங்​கள் பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள 2 ஆடு​களங்​கள் மற்​றும் கொழும்​பில் உள்ள கிரிக்​கெட் கிளப் மைதானம், நவி மும்பை​யில் உள்ள டி.ஒய்​.​பாட்​டீல் ஸ்போர்ட்ஸ் அகாட​மி, சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானம், கொழும்​பில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானம், சிங்கள விளை​யாட்டு கிளப் மைதானம் ஆகிய​வற்​றில் நடைபெறுகின்​றன.

சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெறும் பயிற்சி ஆட்​டத்​தில் பிப்​ர​வரி 2-ம் தேதி கனடா – இத்​தாலி அணி​கள் இரவு 7 மணிக்கு மோதுகின்​றன. தொடர்ந்து 3-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை​பெறும் பயிற்சி ஆட்​டத்​தில் நேபாளம் – ஐக்​கிய அரபு அணி​களும், 5-ம் தேதி பிற்​பகல் 3 மணிக்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் கனடா – நேபாளம் அணி​களும், 6-ம் தேதி பிற்​பகல் 3 மணிக்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் இத்​தாலி – ஐக்​கிய அரபு அமீரகம் அணி​களும் மோதுகின்​றன.

இந்​திய அணி தனது பயிற்சி ஆட்​டத்​தில் 4-ம் தேதி தென் ஆப்​பிரிக்கா​வுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 7 மணிக்கு நவி மும்​பை​யில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here