உலகக் கோப்பை செஸ்: 4-வது சுற்றுக்கு கார்த்திக் முன்னேற்றம்

0
20

ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தொடரில் நேற்று 3-வது சுற்​றின் டை-பிரேக்​கர் ஆட்​டங்​கள் நடை​பெற்​றன.

டை-பிரேக்​கர் சுற்​றின் 2-வது ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் கார்த்​திக் வெங்​கட்​ராமன், ரொமேனியா​வைச் சேர்ந்த கிராண்ட்​மாஸ்​டர் போக்​டான் டேனியல் டீக்​குடன் மோதி​னார். 43-வது நகர்த்​தலில் போக்​டான் டேனியல் டீக்கை தோற்​கடித்​தார் கார்த்​திக். இதன்​மூலம் 4-வது சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளார் கார்த்​திக் வெங்​கட்​ராமன்.

3-வது சுற்​றின் டை பிரேக்​கர் ஆட்​டத்​தில் இந்​திய வீரர் விதித் குஜ்​ராத்​தி, அமெரிக்க வீரர் சாம் ஷாங்​லாண்​டிடம் தோல்வி கண்​டார். அதே​போல், இந்​தி​ய வீரர்​ எஸ்​.எல்​. ​நா​ராயணன்​, சீன வீரர்​ யூ ​யாங்​கி​யிடம்​ தோல்​வி கண்​​டார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here