Home விளையாட்டு செய்திகள் உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் குகேஷ் அதிர்ச்சி தோல்வி

உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் குகேஷ் அதிர்ச்சி தோல்வி

0

 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் எதிர்த்து விளையாடினார். முதல் சுற்றில் குகேஷ் வெள்ளை காய்களுடனும், டிங் லிரென் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள்.

இதில் 42-வது காய் நகர்த்தலின் போது டிங் லிரென் வெற்றி பெற்றார். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டம் மாலை 6.45 மணிக்கு நிறைவடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் டிங் லிரென் ஒரு புள்ளியை முழுமையாக பெற்று முன்னிலையில் உள்ளார். இன்று 2-வது சுற்று நடைபெறுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version