உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிங் லிரென் – குகேஷ் 7-வது சுற்றில் இன்று மோதல்

0
252

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார்.

இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 3 சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன. இதனால் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இந்நிலையில் ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர் இன்று 7-வது சுற்று ஆட்டத்தில் டிங் லிரென், குகேஷ் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதில் லிரென் கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடன் களமிறங்க உள்ளனர். இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here