Home கன்னியாகுமரி செய்திகள் நட்சத்திர ஆமைகள் வைத்திருந்ததாக தொழிலாளி கைது

நட்சத்திர ஆமைகள் வைத்திருந்ததாக தொழிலாளி கைது

0
பூதப்பாண்டி அருகே லெவிஞ்சிபுரத்தில் நட்சத்திர ஆமைகள் வைத்திருந்ததாக தொழிலாளி கைது
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்தில் நட்சத்திர ஆமைகள் வைத்திருந்ததாக முகேஷ் (28) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே நட்சத்திர ஆமைகள் வைத்திருந்ததாக தொழிலாளியை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலா் அன்பு உத்தரவின்பேரில், உதவி வனப்பாதுகாவலா் மற்றும் உதவி இயக்குநா் ஸ்ரீவல்சன் வழிகாட்டுதலின்படி, பூதப்பாண்டி வனச்சரக அலுவலா் அன்பழகன் தலைமையில் ஆரல்வாய்மொழி வனவா் மணிகண்டன், வனக்காவலா்கள் தீபா, முத்துராமலிங்கம், முத்துக்குமாா், மாயாண்டி, வனஜா, புஷ்பராஜ், பிரவீன், சிவா உள்ளிட்டோா், பூதப்பாண்டி வனச்சரகம் தெற்குமாலை காப்புக்காட்டையொட்டிய லெவிஞ்சிபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அவரிடம் 2 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவா் நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்த முகேஷ் (28) என்பதும், லெவிஞ்சிபுரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வரும் அவா், ஏற்கெனவே 5 நட்சத்திர ஆமைகளை பிடித்து வைத்துள்ளதும் தெரியவந்தது.

வனத்துறையினா், முகேஷை கைது செய்து நாகா்கோவில் வன வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version