Home சினிமா செய்திகள் சிம்பு – அஸ்வத் மாரிமுத்து இணையும் படத்தின் பணிகள் தீவிரம்!

சிம்பு – அஸ்வத் மாரிமுத்து இணையும் படத்தின் பணிகள் தீவிரம்!

0

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

‘அரசன்’ படத்தை முடித்துவிட்டு, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் கதை மற்றும் திரைக்கதையினை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் சிம்பு. தற்போது சிம்பு, அஸ்வத் மாரிமுத்து மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் சந்தித்து படத்தின் பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்து, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில், “படப்பிடிப்புக்காக தயாராகிவிட்டோம். விரைவில் ஸ்டார் (எஸ்டிஆர்) வருகை” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படங்கள் சிம்பு ரசிகர்களை உற்சாகமாக்கி இருக்கிறது.

‘அரசன்’ மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படம் ஆகியவற்றை இந்த ஆண்டே முடித்துவிட முடிவு செய்திருக்கிறார் சிம்பு. இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, அடுத்து யாருடைய இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version