Home சினிமா செய்திகள் ‘டெத் ரயில்வே’ சயாம் மரண ரயில் கதையில்லை: இயக்குநர் தரணி ராஜேந்திரன் நேர்காணல்

‘டெத் ரயில்வே’ சயாம் மரண ரயில் கதையில்லை: இயக்குநர் தரணி ராஜேந்திரன் நேர்காணல்

0

‘யாத்​திசை’ படம் மூலம் கவனம் ஈர்த்த தரணி ராஜேந்​திரன் அடுத்து இயக்கியிருக்​கும் படம், ‘டெத் ரயில்வே’. இரண்​டாம் உல​கப் போர் பின்​னணி​யில் உரு​வாகி இருக்​கும் இப்​படத்தை ஜே.கே.ஃபிலிம் இன்​டர்​நேஷனல் சார்​பில் ஜே.கமலக்​கண்​ணன் தயாரித்​திருக்​கிறார். சேயோன் நாயக​னாகவும் பவானி  நாயகி​யாகவும் நடித்​திருக்​கும் இதில், சசிகுமார், சமுத்​திரக்​கனி, அசோக் செல்​வன், கிஷோர், ஷிவதா என பலர் இருக்​கிறார்​கள். படப்​பி​டிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடந்து வரும் நிலை​யில் தரணி ராஜேந்​திரனிடம் பேசினோம்.

Q

சயாம் மரண ரயில் பாதையைதான் ‘டெத் ரயில்வே’ன்னு சொல்வாங்க. இது அதுதொடர்​பான கதையா?

A

இல்லை. இது 2-ம் உலகப் போர் கால​கட்​டத்​துல நடந்த ஒரு சம்​பவத்தை மையப் படுத்​திய கதை. இதுக்​கும் சயாம் மரண ரயில் பாதை சம்​பவத்​துக்​கும் தொடர்​பில்லை. ஆனா அந்த கால​கட்​டத்​துல நடக்​கிற கதைதான். இரண்​டாம் உல​கப்​போர் தீவிரமடையும் போது பர்மா, நாகாலாந்தை ஆக்​கிரமித்து இந்​தி​யாவை நோக்கி முன்​னேறிச்சு ஜப்​பான். இந்த வரலாற்றை நேரடியா பட​மாக்​காம அந்த துயரத்தை பதிவு செய்ய நினைச்​சேன். அது​தான் இந்​தப் படம். நாகாலாந்​துல கொகிமா, ஜப்பூ பீக் மாதி​ரியான இடங்​கள்ல நடந்த சண்​டையை கதைக்​களமா எடுத்​திருக்​கேன். அதுக்கு சயாம் மரண ரயில் பாதையைக் குறிக்​கிற ‘டெத் ரயில்வே’ டைட்​டிலை பயன்​படுத்தி இருக்​கேன்.

Q

எதுக்கு அந்த தலைப்பு?

A

ஏன்னா, அது என்னை மிகவும் பாதிச்ச ஒரு சம்​பவம், அது ஓர் இருண்ட வரலாறு. இந்த தலைப்பை சினிமாவுல பதிவு பண்​ணணும்னு ரொம்ப நாளா தோணுச்சு. அத​னால வச்​சேன். இந்​தப்​படம், வரலாற்று ரீதி​யான விஷயம்​னாலும் அதுல கற்​பனை கதையைதான் பட​மாக்கி இருக்​கேன். இது யாரோட பயோபிக்​கும் இல்லை. 2-ம் உல​கப் போர்ல ஜப்​பான் இந்​தி​யா​வுக்​குள்ள வரும்​போது, நாம பிரிட்​டிஷ் இந்​தி​யாவா இருந்​தோம்.

பிரிட்​டிஷை எதிர்க்க இந்​திய தேசிய ராணுவம் ஜப்​பானோட கூட்​டுச் சேர்ந்​துச்சு. அந்த வரலாறை அடிப்​படையா வச்சு இந்​தப் படம் பண்​ணி​யிருக்​கேன். 1942-44 வரையி​லான காலக்​கட்​டத்​துல நடந்த போரை​யும், போரால சாதா​ரண மக்​கள் எப்​படி பாதிக்​கப்​பட்​டாங்க அப்​படிங்​கறதையும் இதுல பதிவு பண்​ணி​யிருக்​கோம். வெறும் அந்த கால​கட்ட நிகழ்வை மட்​டும் சொல்​லிட்​டுப் போயிட்​டேன்னா அது டாக்​குமென்​டரி மாதிரி ஆயிரும். அத​னால இதுல ஒரு விஷயம் பேசி​யிருக்​கேன். இந்​தப் படம் பார்த்​துட்டு வெளி​யில வரும்​போது யுத்​தம் ஏன் அப்​படிங்​கற கேள்வி எழும்.

Q

‘யாத்​திசை’ பேசப்​பட்ட படம். அப்ப சில ஹீரோக்​கள், “இந்த டீம்​கிட்ட பெரிய பட்​ஜெட் கொடுத்தா பிரம்​மாண்​ட​மான படமா பண்​ணி​யிருப்​பாங்க”ன்னு சொன்​னாங்க… பெரிய ஹீரோவை வச்சு இந்​தப் படத்தை பண்​ணி​யிருக்​கலாமே?

A

இந்​தக் கதையை, ஹீரோக்​களை மனசுல வச்சு நான் எழுதலை. என் கதைக்கு பெரிய ஹீரோக்​கள் தேவைப்​படலை. அதை கதாபாத்​திரங்​களாகத்​தான் பார்க்​கிறேன். இதுல நடிச்​சிருக்​கிற சசிகுமார், சமுத்​திரக்​கனி, ஷிவதா எல்​லாருமே பெரிய நடிகர்​கள்​தான்.

‘யாத்​திசை’யில நடிச்ச சேயோன் ஹீரோவா பண்​ணி​யிருக்​கார். பவானி ஸ்ரீ இருக்​காங்க. அசோக் செல்​வன், சிறப்பு தோற்​றத்​துல நடிச்​சிருக்​கார். இன்​னொன்னு இந்த தயாரிப்பு நிறு​வனம். நான் சுதந்​திரமா படம் எடுக்க இந்த நிறு​வனம் என்னை அனுமதிக்​குது. அத​னால, வேற ஹீரோ, நிறு​வனங்​களை நான் தேடலை.

Q

சசிகுமார் என்​னவா வரு​கிறார்?

A

சசிகுமார் இந்​திய தேசிய ராணுவ கமாண்​டராகவும், இந்​திய வீரர்​களோட தலை​வரா சமுத்​திரக்​க​னியும் வர்​றாங்க. சேயோன் போர் வீரரா நடிச்​சிருக்​கார். அவருக்கு காதல் காட்​சிகள் இருக்கு. பவானி ஸ்ரீ நாகாலாந்து பழங்​குடி பெண்ணா வர்​றாங்க. 1942 கால​கட்​டத்​துல பெண்​கள் எப்​படி இருந்​தாங்​களோ, அப்​படி வரு​வாங்க. இந்த போர், மலைகள்ல நடக்​கிறதுங் கறதால நாகாலாந்​துல பட​மாக்க அனுமதி கிடைக்​கலை. ரொம்ப முயற்சி பண்​ணி​யும் கிடைக்​காததால, நாகர்​கோவில்ல ஷூட் பண்​ணினோம், சில காட்​சிகளை செட் போட்டு எடுத்​தோம்.

தரணி ராஜேந்​திரன், பவானி, தயாரிப்​பாளர் கமலக்​கண்​ணன், சேயோன்.

Q

வரலாற்று படங்​களுக்கு லொகேஷனும் காஸ்ட்​யூமும் ரொம்ப முக்​கியம்னு சொல் வாங்க…

A

உண்​மைதான். காஸ்ட்​யூமுக்கு இப்ப ஆவணங்​கள் இருக்கு. ரொம்ப பழங்காலம்னா நம்​மகிட்ட அதுக்​கான ‘ரெஃபரன்ஸ்’ இருக்​காது. ஆனா, இதுக்கு இருக்கு. இப்ப ஒரு பிரிட்​டிஷ் கேப்​டன் வர்​றார்னா, அவர் எப்​படி இருந்​திருப்பார்ங்​கறதுக்கு ‘ரெஃபரன்ஸ்’ இருக்கு. ஒவ்​வொரு விஷயத்​துலயும் நிறைய டீட்​டெயி​லிங் பண்​ணி​யிருக்​கோம். கதையில மகாத்மா காந்தி வர்​றார், அப்​போதைய ஜப்​பான் பிரதமர் வர்​றார், அவங்​கள்​லாம் எப்​படி வந்​தாங்​களோ அதே போல காஸ்ட்​யூம் ரெடி பண்​ணி​யிருக்​கோம். நிறைய விஷயங்​கள் கதைக் குள்ள இருக்​கும்.

Q

செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்தி இருக்​கீங்​களா?

A

ஆமா. ‘யாத்​திசை’ பண்​ணும்​போது ஏஐ தொழில்​நுட்​பம் இந்​தளவு வளரலை. ஆனா, இன்​னைக்​குத் தவிர்க்க முடி​யாததா ஆயிடுச்சு. அது கிராபிக்ஸ் கூடவே சேர்ந்து வந்​துருது. அத​னால இதுல பயன்​படுத்தி இருக்​கோம். அது கதையை இன்​னும் உயிர்ப்​போட சொல்​றதுக்கு உதவி பண்​ணுது. தமிழ்ல ‘வார்’ படங்​கள் டீட்​டெய்லா வந்​ததில்லை. அந்​தக் குறையை இந்​தப் படம் போக்​கும்னு நம்​பறேன். சர்​தக் கல்​யாணி இசையும் சேது​முருகவேல் ஜெகநாதன் ஒளிப்​ப​திவும் படத்​துக்கு பெரிய பலம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version