மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 10-வது இடம்

0
25

 மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் 9-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா – ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் இந்திய மகளிர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து தொடரை 10-வது இடத்துடன் நிறைவு செய்தது.

ஸ்பெயின் அணி சார்பில் நடாலியா விலனோவா (16-வது நிமிடம்), எஸ்தர் கேனல்ஸ் (36-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி தரப்பில் 41-வது நிமிடத்தில் கனிகா சிவாச் ஒரு கோல் அடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here