மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

0
159

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதன் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜப்பானுடன் நேற்று மோதியது. இதில் இந்திய இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் 48-வது நிமிடத்தில் நவ்னீத் கவுர் பெனால்டி ஸ்டிரோக்கில் கோல் அடித்தார்.

தொடர்ந்து 56-வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி பீல்டு கோல் அடித்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் இந்திய அணி வீராங்னைகள் கோல் அடிக்க கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை வீணடித்தனர். இதில் தவறவிட்ட 13 பெனால்டி கார்னர் வாய்ப்புகளும் அடகும். இன்று மாலை 4.45 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, சீனாவுடன் பலப் பரீட்சை நடத்துகிறது.

சீனா அரை இறுதி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here