மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக சாம்பியன்!

0
221

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவுடன் இன்று மோதியது. இதில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.

இந்திய அணி சார்பில் 31-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை தீபிகா கோலாக மாற்றினார். இந்த தொடரில் அவர், அடித்த 11-வது கோலாக இது அமைந்தது. மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2016 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது. சீன அணி 3-வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்து தொடரை 2-வது இடத்துடன் நிறைவு செய்தது. முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான் – மலேசியா அணிகள் மோதின. இதில் ஜப்பான் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here