திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல அரசின் தூதுவராக பெண்கள் இருக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி

0
261

அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்ல அரசின் தூதுவர்களாக பெண்கள் இருக்க வேண்டும்’ என அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக அரசு சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,874 கோடியில் வங்கிக்கடன் இணைப்புகள் வழங்குதல், 12,233 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உட்பட 22 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை யா.ஒத்தக்கடையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தலைமைவகித்தனர்.இவ்விழாவில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் உதயநிதி பேசியதாவது: அரசு விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.298 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஓர் அரசுஎப்படி செயல்படுகிறது என்பதை தேர்தல் என்ற தேர்வு, போட்டி மூலம்மக்களாகிய நீங்கள் ஆசிரியர்களாக இருந்து மதிப்பெண்கள் போடுவீர்கள். அந்த வகையில் திராவிட மாடல் ஆட்சிக்கு மக்களவைத் தேர்தலில் நற்சான்றிதழாக 40-க்கு 40 தொகுதியில் வெற்றி பெறச் செய்து 100 சதவீத தேர்ச்சியை அளித்துள்ளீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here