பெங்களூருவில் பட்டுப் புடவை வாங்க அதிகாலை 4 மணிக்கு வரிசையில் நிற்கும் பெண்கள்

0
22

கர்​நாடக அரசின் பட்​டுத் தொழில் கழகத்​தின் சார்பில் விற்​பனை செய்​யப்​படும் பட்​டுப் புட​வை​கள் மிக​வும் பாரம்​பரி​யம் மிக்​கவை​யாக கருதப்​படு​கின்​றன. புவி​சார் குறி​யீடு பெற்ற இந்த புட​வை​களுக்கு பெண்​கள் மத்​தி​யில் அமோக வரவேற்பு இருக்​கிறது.

பெங்​களூரு​வில் உள்ள கர்​நாடக அரசின் பட்​டுத் தொழில் கழகத்தின் விற்​பனையகத்​தில் புடவை வாங்​கு​வதற்​காக கர்நாடகாவை சேர்ந்​தவர்​கள் மட்​டுமல்​லாமல் பிற மாநிலங்​களை சேர்ந்​தவர்​களும் குவிந்து வரு​கின்​றனர். வாடிக்​கை​யாளர்​களை கட்​டுப்​படுத்த முடி​யாத​தால் கடந்த 5 ஆண்​டு​களாக வாடிக்கையாளர்​ளுக்கு தலா ஒரு டோக்​கன் மட்​டுமே தரப்படுகிறது.

இந்த டோக்​கனை வாங்​கு​வதற்​காக பெண்​களும், ஆண்​களும் முந்தைய தினம் இரவே கடை வாசலுக்கு வந்து வரிசை​யில் நிற்கின்​றனர். தின​மும் சுமார் 500 பேர் வரை அதி​காலை 4 மணி முதல் 10 மணி வரை 6 மணி நேரம் காத்​திருந்து புட​வை​களை வாங்​கிச் செல்​கின்​றனர்.

10 நிமிடம் மட்​டுமே அனு​மதி: அங்கு வாடிக்​கை​யாளர் கூறும் வண்​ணத்​தில் புட​வை​களை விற்​பனை​யாளர்​கள் காண்பிக்கின்றனர். ரூ.20 ஆயிரம் முதல் ரூ.5 லட்​சம் வரையி​லான விலை​யில் பட்​டுப் புட​வை​களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்​டும். ஒரு வாடிக்​கை​யாள​ருக்கு ஒரு புடவை மட்​டுமே வழங்கப்​படு​கிறது. வாடிக்​கை​யாளர்​கள் பல புட​வை​களை பார்த்து, தேர்வு செய்​வதற்கு அனு​மதி இல்லை என நோட்​டீஸ் ஒட்டப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here