கொல்லப்பட்டதாக கருதிய பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு

0
17

உத்தர பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த 20 வயது இளம்​பெண்​2023-ம் ஆண்டு திடீரென மாய​மா​னார். எங்கு தேடி​யும் அவர் கிடைக்​காத​தால், கணவர் வீட்​டார் தங்களது பெண்ணை வரதட்​சணைக்​காக கொலை செய்து மறைத்​து​விட்​ட​தாக பெற்றோர் குற்​றம்​சாட்​டினர். இதனை விசா​ரித்த நீதி​மன்​றம் கணவர், மாமியர் உட்பட 7 பேர் மீது வழக்​குப்பதிவு செய்ய உத்​தர​விட்​டது.

இதுகுறித்து காவல் துறை அதி​காரி அசோக் குமார் கூறிய​தாவது: மணமானதற்கு பிறகு ஒன்​றரை ஆண்​டு​கள் கழித்து இளம்​பெண் காணாமல் போனது குறித்து கணவர் மற்​றும் மாமி​யார் உட்பட 7 பேர் மீது வரதட்​சணை கொலை வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.

இதையடுத்​து, உத்தர பிரதேச கண்​காணிப்பு குழு இந்த வழக்கை விசா​ரித்து வந்த நிலை​யில் காணா​மல் போன பெண் மத்​திய பிரதேசத்​தில் கண்​டு​பிடிக்​கப்​பட்​டார். உத்தர பிரதேசத்​துக்கு அழைத்து வரப்​பட்ட அவரிடம் தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இத்​தனை காலம் ஏன் அந்த பெண் குடும்​பத்​தாரை தொடர்பு கொள்​ள​வில்லை என்​பது குறித்​தும் விசா​ரிக்​கப்​படு​கிறது. விரை​வில் உண்மை வெளிவரும். இது நீதி​மன்ற வழக்கு வி​சா​ரணை​யில் முக்​கிய தாக்​கத்தை ஏற்​படுத்​தும். இவ்​வாறு அசோக்​ குமார்​ தெரிவித்தா​ர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here