கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காண்ட்ராக்டர் ஈஸ்வரன் அரிவாளால் வெட்டப்பட்டார். சம்பவம் தொடர்பாக, பெண் ஒருவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஈஸ்வரன் வெட்டப்பட்ட வழக்கில் முக்கூடலைச் சேர்ந்த பழனியாச்சி ( வயது 40) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.