ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் வோல்வார்ட்​

0
16

மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்​துள்ள நிலை​யில் பேட்​டிங் தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் இந்​தி​யா​வின் ஸ்மிருதி மந்​த​னா, தென் ஆப்​பிரிக்​கா​வின் லாரா வோல்​வார்ட்​டிடம் முதலிடத்தை இழந்​துள்​ளார்.

அரை இறுதி மற்​றும் இறு​திப் போட்​டி​யில் சதம் விளாசி​யிருந்த லாரா வோல்​வார்ட், உலகக் கோப்பை தொடரில் 571 ரன்​களை வேட்​டை​யாடி இருந்​தார். இதன் மூலம் அவர், தரவரிசை​யில் 814 புள்​ளி​களு​டன் 2 இடங்​கள் முன்​னேறி முதலிடத்தை பிடித்​துள்​ளார்.

ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான அரை இறுதி ஆட்​டத்​தில் சதம் விளாசிய இந்​திய அணி​யின் ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 9 இடங்​கள் முன்​னேறி முதன்​முறை​யாக 10-வது இடத்தை பிடித்​துள்​ளார்.

ஆஸ்​திரேலி​யா​வின் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 637 புள்​ளி​களு​டன் 13 இடங்​கள் முன்​னேறி 13-வது இடத்தை அடைந்​துள்​ளார். அதே அணியை சேர்ந்த எலிஸ் பெர்ரி 669 புள்​ளி​களு​டன் 7-வது இடத்தை நியூஸிலாந்​தின் சோபி டிவைனுடன் பகிர்ந்து கொண்​டுள்​ளார். இந்​திய அணி​யின் கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 4 இடங்​கள் முன்​னேறி 634 புள்​ளி​களு​டன் 14-வது இடத்தை பிடித்​துள்​ளார்.

பந்​து​வீச்சு தரவரிசை​யில் தென் ஆப்​பிரிக்​கா​வின் மரி​சான் காப் 712 புள்​ளி​களு​டன் 2 இடங்​கள் முன்​னேறி 2-வது இடத்தை பிடித்​துள்​ளார். அரை இறுதி ஆட்​டத்​தில் அவர், இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக 20 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தார். இங்​கிலாந்​தின் சோஃபி எக்​லெஸ்​டோன் 747 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் தொடர்​கிறார். இந்​தி​யா​வின் தீப்தி சர்மா 657 புள்​ளி​களு​டன்​ 5-வது இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here