Home தேசிய செய்திகள் ஜார்க்கண்டில் ஏற்கெனவே 4 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் 9 பேருக்கு மூளையை தாக்கும் மலேரியா

ஜார்க்கண்டில் ஏற்கெனவே 4 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் 9 பேருக்கு மூளையை தாக்கும் மலேரியா

0

ஜார்க்​கண்​டில் மேலும் 9 பேருக்கு மூளையை தாக்​கும் மலேரியா பாதிப்பு கண்​டறியப்​பட்​டுள்​ள​தாக அதி​காரி ஒரு​வர் கூறி​னார்.

ஜார்க்​கண்​டின் கிழக்கு சிங்​பும் மாவட்​டத்​தில் உள்ள போட்கா பகு​தி​யில் கொசுக்​களால் ஏற்​படும் ‘செரிப்​ரல் மலேரி​யா’ (மூளையை தாக்​கும் மலேரி​யா) பரவி வரு​கிறது. கடந்த வாரம் இந்த நோய் பாதிப்பு முதன்​முதலில் கண்​டறியப்​பட்​ட​தில் இருந்​து, இது​வரை 4 குழந்​தைகள் உயி​ரிழந்​துள்​ளனர்.

இது தொடர்​பாக அதி​காரி ஒரு​வர் நேற்று கூறுகை​யில் “போட்கா பகு​தி​யில் மேலும் 9 பேருக்கு செரிப்​ரல் மலேரியா புதன்​கிழமை கண்​டறியப்​பட்​டது. இதன் மூலம் கடந்த ஒரு வாரத்​தில் மட்​டும் இப்​பகு​தி​யில் இந்த நோயால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் எண்​ணிக்கை 150 ஆக உயர்ந்​துள்​ளது. இந்த நோய் பாதிப்பை கண்​டறிவதற்​கான பரிசோதனை​களை மாவட்ட நிர்​வாகம் தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. கடந்த ஜூன் 24-ம் தேதி முதல் போட்கா பகு​தி​யில் மொத்​தம் 3,000 ரத்த மாதிரி​கள் பரிசோ​திக்​கப்​பட்​டுள்​ளன” என்​றார்.

செரிப்​ரல் மலேரியா என்​பது பிளாஸ்​மோடி​யம் ஃபால்​சி​பாரம் (Plasmodium Falciparum) தொற்று காரண​மாக ஏற்​படும் உயிருக்கு ஆபத்​தான ஒரு நரம்பியல் பாதிப்​பாகும். இது நோயாளி கோமா நிலைக்கு செல்​லவும், கடுமை​யான மூளை பாதிப்பு ஏற்​பட​வும் வழி​வகுக்​கிறது. இந்த நோய் பாதிப்பு பெரும்​பாலும் கந்​தார், ஹித்​பாசா ஆகிய கிராமங்​களில் பதி​வாகி​யுள்​ளது. அங்கு மருத்​து​வக் குழுக்​கள் நிலை​மையை தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றன.

மருந்​துகள், கொசு வலைகளை வழங்​கி, முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கின்​றனர். செரிப்​ரல் மலேரி​யா​வால் பாதிக்​கப்​பட்ட 9 நோயாளி​கள் போட்கா பகு​தி​யில் உள்ள மருத்​து​வ​மனை​யிலும், 45 பேர் ஜாம்​ஷெட்​பூரில் உள்ள சதர் மருத்​து​வ​மனை​யிலும் அனு​ம​திக்​கப்​பட்​டு சிகிச்​சை பெற்​று வரு​கின்​றனர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version