‘மணக்கும்’ தலைவருக்கு இலைக் கூட்டணியில் ஷேர் இல்லை என எடக்கானவர் மீண்டும் சொல்லிவிட்ட நிலையில், இதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு ஆக்டர் கட்சியில் அப்ளிகேஷனைப் போட்டுவைத்திருக்கிறாராம் ‘மணக்கும்’ தலைவர்.
ஆனால், யாராவது வந்தால் உள்ளே இழுத்துப் போடலாம் என நினைக்கும் அந்தக் கட்சியிலேயே, “அவரெல்லாம் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. தேவைப்பட்டால் பிப்ரவரியில் பார்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லி அன்னாரின் அப்ளிகேஷனை வெயிட்டிங்கில் வைத்துவிட்டார்களாம்.
அதேசமயம், டெல்லி அட்வைஸால் தற்போது மனம் மாறி இருக்கும் குக்கர் தலைவர், இலைக் கூட்டணியில் ஒரு ஓரமாக தொத்திக் கொள்ள கிட்டத்தட்ட சம்மதித்து விட்டாராம். எடக்கானவர் எதுவும் எடக்கு மடக்குப் பண்ணாத வரை குக்கர் தலைவர் மனம் மாறமாட்டார் என்கிறார்கள்.



