வந்தே மாதரம் பாட முஸ்லிம்கள் மறுப்பது ஏன்? – ஜமியத் இ உலாமா ஹிந்த் தலைவர் விளக்கம்

0
9

நாடாளு​மன்​றத்​தில் வந்தே மாதரம் பாடல் மீதான சிறப்பு விவாதம் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், முஸ்​லிம்​களின் முக்​கிய அமைப்​பான ஜமி​யத் இ உலாமா ஹிந்த் அமைப்​பின் மவுலானா அர்​ஷத் மதானி தனது சமூக வலைதளப் பதி​வில் கூறி​யிருப்​பாவது:

வந்தே மாதரம் பாடு​வதை நாங்​கள் எதிர்க்​க​வில்​லை. முஸ்​லிம்​கள் அல்​லாவை மட்​டுமே வணங்​கு​கிறார்​கள். அல்​லா​வைத் தவிர வேறு யாரை​யும் எங்​கள் வழி​பாட்​டில் சேர்க்க முடி​யாது. வந்தே மாதரத்​தின் மொழிபெயர்ப்பு ஷிர்க் (பாவம்) தொடர்​பான நம்​பிக்​கையை அடிப்​படை​யாகக் கொண்​டது.

வந்தே மாதரத்​தின் 4 வாக்​கி​யங்​களி​லும், நாடு தெய்​வீகப்​படுத்​தப்​பட்டு துர்கா தேவி​யுடன் ஒப்​பிடப்​படு​கிறது. வழி​பாட்டு வார்த்​தைகள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

வந்தே மாதரம் என்​றால், ‘அம்மா நான் உன்னை வணங்​கு​கிறேன்’ என்று பொருள். இது முஸ்​லிம்​களின் மத நம்​பிக்​கைகளுக்கு எதி​ரானது. இஸ்​லாத்​தின் நம்​பிக்​கைக்கு எதி​ரான கோஷங்​களையோ அல்​லது பாடல்​களையோ பாட யாரை​யும் கட்​டாயப்​படுத்த முடி​யாது.

அரசி​யலமைப்பு பிரிவு 25-ன் கீழ் மத சுதந்​திரத்​தை​யும், பிரிவு 19-ன் கீழ் கருத்து சுதந்​திரத்​தை​யும் உறுதி செய்​கிறது. நாட்டை நேசிப்​ப​தற்​கும் வணங்​கு​வதற்​கும் பெரிய வித்​தி​யாசம் உள்​ளது.

முஸ்​லிம்​களுக்கு தேசபக்தி சான்​றிதழ் தேவை​யில்​லை. சுதந்​திரத்​துக்​காக அவர்​கள் செய்த தியாகங்​கள் வரலாற்​றில் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. நாங்​கள் ஒரே கடவுளை நம்​பு​கிறோம். யாருக்​கும் முன்​பாக நாங்​கள் சிரம் பணிவ​தில்​லை.

மரணம் என்​பது ஏற்​கத்​தக்​கது. ஆனால், எங்​கள் இறைவனுக்கு இணை​யாக யாரையும் ஏற்​க முடி​யாது. பிரி​வினை​வாத சக்​தி​கள் இஸ்​லாத்​துக்கு அஞ்​சுகின்​றன. அதை அவம​திப்​ப​தன் மூலம் அதை அழிக்க அவர்​கள் கனவு காண்​கிறார்​கள்.

இஸ்​லாத்​தின் போதனை​களை முழு மனதுடன் பின்​பற்​று​வது முஸ்​லிம்​களின்​ பொறுப்​பு. இவ்​வாறு அவர்​ தெரிவித்துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here