Home மாநில செய்திகள் 2031-க்குள் தமிழகத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்: பணிபுரிவோரின் எண்ணிக்கை குறையும் என வெள்ளை அறிக்கையில் தகவல்

2031-க்குள் தமிழகத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்: பணிபுரிவோரின் எண்ணிக்கை குறையும் என வெள்ளை அறிக்கையில் தகவல்

0

தமிழகத்​தில் 2031-ம் ஆண்டுக்​குள் முதியோர் எண்​ணிக்கை அதி​கரித்​து, பணிபுரிவோரின் எண்​ணிக்கை குறை​யும் என நிதி அமைச்​சர் மரிய வில்​சன் வெளி​யிட்ட வெள்ளை அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

தமிழக நிதி அமைச்​சர் மரிய வில்​சன் வெளி​யிட்ட வெள்ளை அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த வெள்ளை அறிக்கை 2026-27-ம் ஆண்​டுக்​கான இடைக்​கால வரவு செலவு திட்ட மதிப்​பீடு​களை ஆய்வு செய்​கிறது.

அதன்​படி, மாநிலத்​தின் மொத்த வரி வரு​வாய் ரூ.2,29,579 கோடி​யாக, அதாவது 19 சதவீத வளர்ச்​சி​யுடன் கணிக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், வழக்​க​மான செயல்​பாட்டு சூழ்​நிலை​யின் அடிப்​படை​யில், உண்​மை​யான வளர்ச்சி விகிதம் சுமார் 8 சதவீத​மாகவே இருக்​கும் என கருதப்​படு​கிறது. அதன்​படி, வரு​வாய் சுமார் ரூ.2,08,000 கோடி​யாக மட்​டுமே இருக்​கும்.

செல​வினங்​களை பொறுத்​தவரை முக்​கி​யத் தொடர் செல​வினங்​கள் இந்த மதிப்​பீடு​களில் இடம்​பெற​வில்​லை. தமிழ்​நாடு மின் பகிர்​மான கழகத்​துக்கு ஆண்​டு​தோறும் வழங்​கப்பட வேண்​டிய இழப்​பீட்​டுத் தொகை ரூ.16 ஆயிரம் கோடியும், உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்படி ஒழுங்​கு​முறை சொத்​துகளுக்​காக இந்​நிறு​வனத்​துக்கு ஆண்​டு​தோறும் செலுத்​தப்பட வேண்​டிய ரூ.11,800 கோடி​யும் முழு​மை​யாக கணக்​கில் கொள்​ளப்​பட​வில்​லை. இதனால், வரு​வாய் செல​வின ஒதுக்​கீடு ரூ.27,800 கோடிக்கு குறை​வாக காட்​டப்​பட்​டுள்​ளது.

நிதிப் பற்​றாக்​குறை

இவை அனைத்​தை​யும் இணைத்து இடைக்​கால வரவு செலவு திட்​டத்​தில் குறிப்​பிடப்​பட்​டுள்ள வரு​வாய் பற்​றாக்​குறை சுமார் ரூ.48,698 கோடிக்கு மாறாக, 2026-27-ம் ஆண்​டில் ரூ.90,500 கோடியை எட்​டக்​கூடும்.

அதே​போல், வரவு செலவு திட்​டத்​தில் மதிப்​பிடப்​பட்​டுள்ள நிதிப் பற்​றாக்​குறை ரூ.1.22 லட்​சம் கோடி ரூபாய்க்கு மாறாக ரூ.1.64 லட்​சம் கோடி ரூபாயை நெருங்​கக்​கூடும் என்​பதை உணர்த்​துகிறது.

தமிழகத்​தில் முதி​ய​வர்​களின் பங்கு 2011-ம் ஆண்​டில் 10.6 சதவீத​மாக இருந்த நிலை​யில், அது 2031-ம் ஆண்​டுக்​குள் 18.2 சதவீத​மாக உயரும் என்​றும், முதி​யோர் சார்ந்​திருக்​கும் விகிதம் 2036-ம் ஆண்​டுக்​குள் 32.7 சதவீத​மாக உயரும் என்​றும் கணிக்​கப்​பட்​டுள்​ளது. பணிபுரி​யும் வயதினர் எண்​ணிக்கை குறைந்து வரு​வ​தால், வரி செலுத்​து​வோரின் எண்​ணிக்​கை​யும் குறை​கிறது.

செல​வினங்​களை அதி​கரிக்​கும்

அதேவேளை​யில் அதி​கரித்து வரும் முதி​ய​வர்​களின் எண்​ணிக்கை சமூகப் பாது​காப்பு மற்​றும் சுகா​தார சேவை​களுக்​கான செல​வினங்​களை அதி​கரிக்​கச் செய்​கிறது. இந்த கத்​திரிக்​கோள் விளைவு மாநிலத்தை கடன் வலையை நோக்கி தள்​ளுகிறது.

இந்த வெள்ளை அறிக்கை முன்​வைக்​கும் தீர்வு சவாலானது. ஆனால், சாத்​திய மற்​றது அல்ல. வரு​வாய் வசூலிக்​கும் துறை​களில் உள்ள இழப்​பு​கள் மற்​றும் ஊழலை கட்​டுப்​படுத்​துதல், சரக்கு கொள்முதல் மற்​றும் பணி​களுக்​கான செல​வு​களை குறைத்​தல், பொது மக்​கள் மீது புதிய சுமை ஏது​மின்றி கூடு​தல் நிதி​யா​தா​ரங்​களைத் திரட்​டு​தல் ஆகியவே அந்த வழி​முறை​கள் ஆகும்.

தமிழகத்தின் மக்​கள் தொகை அமைப்​பில் ஏற்​பட்டு வரும் மாற்​றம் மற்​றொரு பெரும் சவாலாகக் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version