யார் முதல்வராக வரக்கூடாது என்பதுதான் எங்களுக்கு முக்கியம்: நயினார் நாகேந்திரன் கருத்து

0
20

கூட்​ட​ணி​யில் எங்​களுக்கு தொகுதி எண்​ணிக்கை முக்கியம் அல்ல. யார் முதல்​வ​ராக வரக் கூடாது என்​பது​தான் முக்கியம் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்.

புதுக்​கோட்டை மாவட்​டம் ஆலங்​குடி அருகே பாஜக​வின் தன்​னார்வ தொண்டு நிறுவன பிரிவு (என்​ஜிஓ) சார்​பில் சுதேசி, சுய​சார்பு மற்​றும் சுய வேலை​வாய்ப்பு உரு​வாக்​கும் ‘வாழ்​வா​தார அடைக்​காப்​பகம்’ திட்​டத் தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது.

என்​ஜிஓ பிரி​வின் மாநில அமைப்​பாளர் இரா.அர்​ஜுனமூர்த்​தி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எல்.முரளிதரன் வரவேற்றார். பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் சிறப்புரை ஆற்றினார்.

அமைப்பு பொதுச் செய​லா​ளர் கேசவ​வி​நாயகம், பாஜக மாநிலச் செய​லா​ளர் கருப்பு முரு​கானந்​தம், துணைத் தலை​வர் குஷ்பு உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். பின்​னர், நயி​னார் நாகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

தேர்​தல் கூட்​டணி தொடர்​பாக மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி சந்​தித்து உள்​ளார். நானும் பழனி​சாமியை சந்​தித்​துப் பேச உள்​ளேன். கூடு​தல் இடங்​களைக் கேட்டு பாஜக நெருக்​கடி கொடுக்​க​வில்​லை.

எங்​களுக்கு தொகுதி எண்​ணிக்கை முக்கியம் அல்ல. யார் முதல்​வ​ராக வரக் கூடாது என்​பது​தான் முக்கியம். அதி​முக பொதுச் செயலாளரை சந்​தித்து அன்​புமணி பேசி​யது சட்​ட​விரோத​மானது என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறியது தொடர்​பாக நான் கருத்து கூற முடி​யாது.

நடிகர் விஜய்​யின் ஜனநாயகன் படத்​துக்கு தணிக்​கைச்சான்று வழங்​காததற்கு பிரதமரை குறை கூற முடி​யாது. அதை திரைப்பட தணிக்கை வாரி​யம் பார்த்​துக் கொள்​ளும்.

நடிகர் விஜய்க்கு காங்​கிரஸ் கட்சி ஆதர​வாக இருப்​ப​தாக தெரிவதைப் பார்த்​தால், காங்​கிரஸ் கட்​சி​யினர் நடிகர் விஜய்​யுடன் பேசி இருக்​கலாம் என்று கருதுகிறேன். இவ்​வாறு நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here