‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ என்ன கதை?

0
149

பரத், சுஹைல், ராஜாஜி, அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’. பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஹைப்பர் லிங்க் த்ரில்லர் கதையை கொண்ட இந்தப் படம், செப்.26-ம் தேதி வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் டிசம்பரில் வெளியாக இருக்கிறது.

படம் பற்றி இயக்குநர் பிரசாத் முருகன் கூறும்போது, “மனிதர்களின் வாழ்க்கையில் அவரவர் சூழ்நிலையை பொறுத்துக் கிடைக்கும் சந்தர்ப்பம் தான் ஹீரோ, அது தான் வில்லன். காரணம் ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்துதான் அவன் அதை நன்மைக்கோ, தீமைக்கோ பயன்படுத்துவான். அப்படி 4 பேர் கைகளில் எதிர்பாராத விதமாக ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. அவர்கள் வாழ்க்கையை, அந்த துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்பதை கமர்ஷியலாக கூறியுள்ளோம்” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here