‘தக் லைஃப்’ படத்தின் கதைக்களம் என்ன?

0
266

கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது வெளிநாட்டு தணிக்கைக்கு விண்ணப்பித்தது மூலம், படத்தின் கதைக்களம் என்ன என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, “ரங்கராய சக்திவேல் நாயக்கர் ஒரு பிரபலமான, செல்வாக்கு மிக்க காட்ஃபாதர். வன்முறையும், உலகளாவிய சிண்டிகேட் கும்பலுடனான தொடர்பும்தான் இவரது உலகம்.

ரங்கராய சக்திவேல் நாயக்கருக்கு அவருடைய மகன் மிகவும் நெருக்கமானவர். கதையின் ஒரு கட்டத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. ஆனால், இறுதியில் அவர் திரும்பி வருகிறார். விதியால் பிரிந்த அவரும், அவரது மகனும் இறுதியில் எதிரிகளாகி நிற்கின்றனர். பின் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது” என்பதே கதைக்களம் என படக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here