எது சினிமா? – நெட்டிசன்களை ஈர்த்த இயக்குநர் ஹேமந்த்தின் ‘நச்’ பதில்

0
190

2023-ல் வெளியான ‘சப்த சாகரடாச்சே எல்லோ – சைட் ஏ’, ‘சப்த சாகரடாச்சே எல்லோ – சைட் பி’ கன்னட மொழித் திரைப்படங்கள் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தின் இயக்குநர் ஹேமந்த் ராவ் நேர்காணல் ஒன்றில், “குறிப்பிட்ட சில வகை திரைப்படங்களைப் பார்ப்பவருக்குத்தான் சினிமாவைப் பற்றித் தெரியும் என்கிற கருத்தும் கமர்சியல் படங்களைப் பார்ப்பவருக்கு சினிமாவைப் பற்றி தெரியாது என்கிற கருத்தும் பரவலாக உள்ளது.

பெரும்பாலும் நிறைய திரைப்படங்களைப் பார்ப்பவர்தான் இது போன்ற கருத்துகளை முன்வைக்கின்றனர். ஒருவரின் சினிமா ரசனைக்கு இதுதான் எல்லை என அளவீடுகள் இருக்கக்கூடாது என நினைக்கிறேன். நாள் முழுக்க வேலையில் அலைந்து திரிந்து இளைப்பாற நினைப்பவருக்கு அவர் நினைத்தபடி எந்த சினிமாவைப் பார்க்க விருப்பமோ அதைப் பார்க்கட்டுமே, அவருக்குப் பிடிக்கும்போது இன்னொருவருக்குப் பிடிக்காமல் போகலாம். இதில் தவறேதும் இல்லை” எனப் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்கள் பலர் ஹேமந்தின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளனர். என்றாலும், ‘உலக சினிமா தெரியுமா? அது தெரியுமா? இது தெரியுமா?’ எனச் சிலர் கமர்ஷியல் சினிமா ரசிகர்களை வம்பிழுத்தும் வருகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here