சாதாரண மனிதனின் கோபம் எப்படியிருக்கும்? – ‘மனிதனும் தெய்வமாகலாம்’ இயக்குநர் நேர்காணல்

0
20

யோகி​பாபு நடித்த ‘ட்​ரிப்’, ‘தூக்​குதுரை’ படங்​களை இயக்​கிய டென்​னிஸ் மஞ்​சு​நாத், கிராமத்​துப் பின்​னணி​யில் இயக்கி இருக்​கும் படம், ‘மனிதனும் தெய்​வ​மாகலாம்’. செல்​வ​ராகவன், கவுசல்​யா, குஷி ரவி, மைம் கோபி, ஒய்​.ஜி.மகேந்​திரா என பலர் நடித்​திருக்​கும் இப்​படத்​துக்கு ரவிவர்மா ஒளிப்​ப​திவு செய்​திருக்​கிறார்.

ஏ.கே.பிரியன் இசை அமைத்​துள்​ளார். வியோம் என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் விஜயா சதீஷ், ஆர்​.எஸ் சதீஷ் தயாரித்​திருக்​கும் இத்​திரைப்​படம் ஏப்​ரலில் வெளி​யாக இருக்​கிறது. இயக்​குநர் டென்​னிஸ் மஞ்​சு​நாத்​திடம் பேசினோம்.

Q

உண்​மைச் சம்​பவக் கதைன்னு டிரெய்​லர்ல வருதே..?

A

ஆமா. தமிழ்​நாட்​டுல நடந்த ஓர் உண்​மைச் சம்​பவத்தை மையமா வச்சு உரு​வான படம் இது. பெண்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்தற மாதிரி​யான கதை. ஒரு கிராமத்​துல, ஒரு குடும்​பத்​துக்​குள்ள நடக்​கிற பிரச்​சினை​யில அரசி​யல் நுழை​யும்​போது அந்த குடும்​பத்​துக்​கும் கிராமத்​துக்​கும் என்ன விளைவு​கள் ஏற்​படுது. அந்​தப் பிரச்​சினை​களை தீர்க்க, ஹீரோ என்ன பண்​றார்ங்​கறது கதை. நாம எல்​லாருமே அது மாதிரி​யான ஒரு பிரச்​சினையை சந்​திச்​சிருப்​போம். அது என்ன பிரச்​சினைங்​கறதுக்கு ரிலீஸ் வரை காத்​திருப்​போமே!

Q

பழி​வாங்​கும் கதை​யா?

A

பழி​வாங்​குறதுன்னு சொல்ல முடி​யாது. இது கணவன் மனை​விக்​குள்ள இருக்​கிற காதலைச் சொல்ற படம். அதுக்​குள்ள வேற சில விஷ​யங்​கள் நடக்​குது. ஒரு மனிதன் இன்​னொரு மனிதனை கொன்​றால் கொலை. கடவுள் பண்​ணினா தண்​டனைன்னு சொல்​றோம்.

அப்​படித்​தான் இதுல வர்ற ஹீரோ, நீதியை எப்​படி வாங்கி கொடுக்​கிறார், நேர்​மை​யான வழி​யில வாங்​குனா எப்​படி​யிருக்​கும்? அதர்ம வழியா இருந்தா எப்​படி​யிருக்​கும்? அதை வாங்​கிக் கொடுக்​கும்​போது சக மனிதர்​கள் பார்​வை​யில அவன் எப்​படி தெய்​வமா தெரியறான் அப்​படிங்​கறதை சொல்​லி​யிருக்​கேன்.

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்

Q

செல்​வ​ராகவனை ஹீரோவா தேர்வு செஞ்​சது ஏன்?

A

இந்த கதைப்​படி ஒரு ‘இன்​னொசன்​டா’ன, ‘சாஃப்​டான’ முகம் தேவை. அதாவது ஒரு பெரிய பிரச்​சினையை எதிர்​கொள்ற சக்​தி​யில்​லாத ஒரு மனிதன் எப்​படி​யிருப்​பான்? அது மாதிரி​யான நடிகர் தேவைப்​பட்​டது.

சாதாரண ஒருத்​தன் மேல அடி விழும்​போது ஒரு​முறை, ரெண்டு முறை தாங்​கிக்​கு​வான். தொடர்ந்து யாரால​யும் தாங்​கிக்​கிட்டே இருக்க முடி​யாது. ஏதாவது ஒரு பாயின்ட்ல அவனுக்கு கோபம் வரும், வரணும். அப்​படி​யான கேரக்​டருக்கு செல்​வ​ராகவன் சார் சரியா பொருந்​தி​னார். அவரை நடிக்​கக் கேட்​டதும், முழுக் கதையை​யும் படிச்​சுட்டு சொல்​றேன்னார்.

படிச்​சுட்​டு, இந்​தக் கதை​யில ஒரு லைஃப் இருக்​கு; நான் கண்​டிப்பா நடிக்​கிறேன்னு சொன்​னார். இதுக்கு முன்​னால பல படங்​கள்ல நடிச்​சிருந்​தா​லும் இதுல​தான் முழு ஹீரோவா அவர் பண்​ணி​யிருக்​கார். இந்​தக் கதைக்​காக 10 கிலோ உடல் எடையை குறைச்​சார். இதில் அவர் நுங்கு வியா​பாரியா வர்​றார்.

Q

நீண்ட இடைவெளிக்​குப் பிறகு கவுசல்​யாவை நடிக்க வச்​சிருக்​கீங்​களே…

A

செல்​வ​ராகவன் சாருக்கு அக்​காவா கவுசல்யா நடிச்​சிருக்​காங்க. அந்த கேரக்​டருக்கு சிறந்த நடிப்பை கொடுக்​கிற ஒரு நடிகை தேவைப்​பட்​டாங்க. அதனால அவங்​களை நடிக்க கேட்​டோம். கதையை கேட்​டதும் ஓகே சொல்​லிட்​டாங்க. அவங்க கணவரா சதீஷ் நடிச்​சிருக்​கார். தமிழ், மலை​யாளப் படங்​கள்ல நடிச்​சுட்டு வர்ற அவர், இப்​படத்​தோட தயாரிப்​பாளர்​கள்ல ஒருத்​தர்.

குஷி ரவி ஹீரோ​யினா நடிச்​சிருக்​காங்க. கன்​னடத்​துல வெளி​யான ‘தி​யா’ படத்​துல​யும் ‘அடிபொலி’ங்கற ஒரு ஆல்​பம் பாடல்​ல​யும் அவங்க நடிப்பு பிடிச்​சிருந்​தது. இந்​தப் படத்து கேரக்​டருக்​கும் கச்​சிதமா இருந்​த​தால அவங்​களை நடிக்க வச்​சோம். லிர்த்​தி​கான்னு ஒரு குழந்தை நடிச்​சிருக்​காங்க. இந்​தப் படத்​தோட கதை சேலம் பக்​கத்​துல இருக்​கிற நகரமலைங்கற மலைப்​பகுதி கிராமத்​துல நடக்​குது. ஷூட்​டிங்​கும் அங்​க​தான் நடக்​குது.

Q

‘மனிதனும் தெய்​வ​மாகலாம்​’னு சிவாஜி நடிச்சு ஒரு படம் வந்​திருக்​கே…

A

ஆமா. அந்​தப் படத்​துக்​கும் இதுக்​கும் சம்​பந்​தமில்​லை. ரெண்டு கதை​யும் வேற. தலைப்பு மட்​டும்​தான் தொடர்​பு. தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​துல இந்த டைட்​டில் கேட்​டோம். கொடுத்​துட்​டாங்க. இந்​தப் படம் குடும்​பத்​தோட ரசிக்​கிற மாதிரி இருக்​கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here