இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு எப்படி? – மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்

0
26

 ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. இந்நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு எப்படி என்பதை பார்ப்போம்.

லீக் சுற்றில் இந்திய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளை பெற்றுள்ளது. முதல் சுற்றில் இன்னும் 2 ஆட்டங்களில் இந்தியா விளையாட வேண்டும். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தூரில் இங்கிலாந்து அணி உடனான ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை நெருங்கி வந்து தவறவிட்டது இந்திய அணி. இது இப்போது இந்தியாவுக்கு நெருக்கடி தந்துள்ளது.

அடுத்த 2 ஆட்டங்களில் நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இதில் இரண்டிலும் வெற்றி பெற்றால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும். இதில் ஏதேனும் ஒரு ஆட்டத்தில் தோல்வியை தழுவும் பட்சத்தில் மற்ற அணிகளின் ஆட்டத்தின் முடிவுக்காக இந்தியா காத்திருக்க வேண்டும்.

நியூஸிலாந்து உடனான ஆட்டத்தில் இந்தியா தோல்வியை தழுவினால் அது இந்தியாவுக்கு மேலும் நெருக்கடியாக அமையும். அந்த ஆட்டத்துக்கு பிறகு வங்கதேச அணியை இந்தியா வீழ்த்த வேண்டும். அதேநேரத்தில் இங்கிலாந்து உடனான லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து தோல்வியை தழுவ வேண்டும். அப்போதுதான் இந்தியா அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. எஞ்சியுள்ள ஒரு அணிக்கான இடத்தை பிடிப்பதில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here