வன்முறை பாதித்த பகுதிக்கு செல்ல முயன்ற மேற்கு வங்க பாஜக தலைவர் கைது

0
239

வன்முறை பாதித்த பெல்தங்கா பகுதிக்கு செல்ல முயன்றதாக மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தை ஒட்டி அமைந்துள்ள பெல்தங்கா பகுதியில் கடந்த சனிக்கிழமை இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக அப்பகுதியில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அப்பகுதிக்கு செல்ல முயன்றதாக மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக தலைவர் சுகந்தா மஜும்தாரை, நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகர் பகுதியில் போலீஸார் கைது செய்தனர். போலீஸார் தடுத்தும் அவர் அப்பகுதிக்குச் செல்ல முயன்றதால் அவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் கொத்வால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here