மேற்கு ஆசிய போர் பதற்றம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

0
21

மேற்கு ஆசிய போரால் ஏற்​பட்​டுள்ள பிரச்சினைகளை சமாளிக்​கும் தயார் நிலை குறித்து மாநில முதல்வர்​களு​டன் காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்​துகிறார்.

ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜல சந்​தி​யில் கச்சா எண்ணெய் கப்​பல்​களின் போக்​கு​வரத்து தடைபட்​டுள்​ளது. இதன் காரண​மாக கச்சா எண்​ணெய் விலை அதி​கரித்​துள்​ளது. வளைகுடா நாடு​களில் இருந்து உரங்​கள் விநி​யோகத்​தி​லும் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. மேற்​காசிய நில​வரம் குறித்து அனைத்து கட்சி பிர​தி​நி​தி​களிடம் மத்​திய அரசு நேற்று முன்​தினம் ஆலோசனை நடத்​தி​யது.

இந்​நிலை​யில் மாநிலங்​களின் தயார் நிலை மற்​றும் திட்​டங்​கள் குறித்து ஆய்வு செய்ய அனைத்து மாநில முதல்​வர்​களு​டன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோ​சனை நடத்துகிறார். மேற்​காசிய போரால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடியை சமாளிக்​கும் திட்​டங்​கள் மற்​றும் தயார் நிலை குறித்து இதில் ஆலோ​சிக்​கப்​படு​கிறது. இந்த நெருக்​கடி நிலையை சமாளிக்க நாட்​டில் உள்ள அனைத்து மாநிலங்​களும் ஒரு குழு​வாக செயல்படு​வதை உறுதி செய்​வது​தான் இந்த ஆலோ​சனை கூட்டத்தின் நோக்​கம் ஆகும்.

சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறும் தமிழகம் உள்​ளிட்ட மாநிலங்களின் முதல்​வர்​கள், தேர்​தல் நடத்தை விதி​முறை​கள் அமலில் இருப்​ப​தால், இந்த கூட்​டத்​தில் பங்​கேற்க மாட்​டார்​கள். ஆனால், இந்த மாநிலங்​களின் தலைமை செயலர்​களு​டன் அமைச்சரவை செய​லா​ளர் தனி​யாக ஆலோ​சனை கூட்​டம்​ நடத்துவார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here