ஹுமாயூன் கபீர் போன்றவர்களுடன் கூட்டணி வைக்கமாட்டோம்: அமித் ஷா உறுதி

0
16

மேற்கு வங்​கம் கொல்​கத்​தா​வில் நேற்று பாஜக​வின் தேர்​தல் அறிக்​கையை மத்​திய அமைச்​சர் அமித் ஷா வெளி​யிட்​டார். அப்​போது, ஆம் ஜனதா உன்​னயன் கட்​சித் தலை​வர் (ஏஜே​யுபி) ஹுமாயூன் கபீருடன் பாஜக மறை​முகக் கூட்​டணி வைத்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறதே என்று நிருபர்​கள் கேள்வி எழுப்​பினர்.

அதற்கு மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறிய​தாவது: பாஜ கட்​சி​யின் கொள்​கைகள், சித்​தாந்​தங்​கள் வேறு, ஆம் ஜனதா உன்​னயன் கட்​சி​யின் கொள்​கைகள், சித்​தாந்​தங்​கள் வேறு.

மேற்கு வங்​கத்​தில் பாபர் மசூ​தி​யைக் கட்​டு​வேன் என்று கூறி பிரபல​மானவர் ஹுமாயூன் கபீர். நாங்​கள் மேற்கு வங்​கத்​தில் 20 ஆண்​டு​களுக்கு எதிர்க்​கட்​சி​யாக வேண்​டு​மா​னாலும் அமர்​வோம். ஹுமாயூன் கபீர் போன்​றவர்​களு​டன் கூட்​டணி வைக்க மாட்​டோம்.

ஹுமாயூன் கபீரும், பாஜக​வும் தென் துரு​வம், வடதுரு​வம் போன்​றது. எப்​போதுமே ஒன்று சேர்ந்து கூட்​டணி வைக்க முடி​யாது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வரும், முதல்​வரு​மான மம்தா பானர்​ஜியை தேர்​தலில் தோற்​கடிக்க, பாஜக தலை​வர்​கள் ஹுமாயூன் கபீருடன் மறை​முகக் கூட்​டணி வைத்​துள்​ளனர் என்ற குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. அதை தற்​போது அமித் ஷா மறுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here