3 ஈரான் போர்க் கப்பல்களை இந்தியாவில் நிறுத்த அனுமதி அளித்தோம்: அமைச்சர் ஜெய்சங்கர்

0
14

ஈ​ரானின் 3 போர்க் கப்​பல்​களை இந்​திய துறைமுகத்தில் நிறுத்த அனு​மதி வழங்​கப்​பட்​டது என வெளியுறவுத்​ துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் மாநிலங்​களவை​யில் தெரி​வித்​தார்.

இந்​தி​யா​வில் கடற்​படை கூட்டு பயிற்​சி​யில் பங்​கேற்​று​விட்டு ஈரான் திரும்​பிய ஐஆர்​ஐஎஸ் தேனா என்ற போர்க்​கப்​பலை, அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் இந்​தியப் பெருங்​கடல் பகு​தி​யில் தாக்கி அழித்​தது. இதுகுறித்து இந்​தியா மவுனம் காப்​பது ஏன் என எதிர்க்​கட்​சிகள் கேள்வி எழுப்​பின.

இந்​நிலை​யில் ஈரான் போருக்​குப்​பின் நடந்​தது என்ன, இந்​தியா எடுத்த நடவடிக்​கைகள் குறித்து மாநிலங்​களவையில் வெளியுறவுத் ​துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் நேற்று கூறிய​தாவது: ”ஈரான் மீது கடந்த மாதம் 28ம் தேதி நடை​பெற்ற தாக்​குதல், அதைத் தொடர்ந்து நடை​பெறும் சம்​பவங்​கள் மிகுந்த கவலையளிக்​கிறது.

இந்​தி​யா​வில் நடை​பெற்ற சர்​வ​தேச கடற்​படை கூட்​டுப் பயிற்சியில் பங்​கேற்க 3 ஈரான் போர்க்​ கப்​பல்​கள் கடந்த மாதம் வந்​தன. அவற்றை இந்​திய துறை​முகங்​களில் நிறுத்த ஈரான் கடந்த 28-ம் தேதி அனு​மதி கோரியது. இதற்கு மார்ச் 1ம் தேதி இந்தியா அனு​மதி வழங்​கியது.

இதையடுத்து ஐஆர்​ஐஎஸ் லவான் என்ற கப்​பல் கொச்​சி​யில் கடந்த மார்ச் 4-ம் தேதி நிறுத்​தப்​பட்​டது. அதில் உள்ள கடற்​படை வீரர்​கள், இந்​திய கடற்​படை முகாமில் தங்​கி​யுள்​ளனர். இந்த மனிதாபி​மான நடவடிக்​கைக்கு ஈரான் வெளி​யுறவுத் ​துறை அமைச்​சர் நன்றி தெரி​வித்​துள்​ளார்.

அன்​றைய தினம் ஐஆர்​ஐஎஸ் தேனா என்ற போர்க்​கப்​பல்லை அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் டார்​பிடோ குண்டு மூலம் தாக்கி அழித்​தது. மற்​றொரு ஈரான் போர்க் கப்​பல் ஐஆர்​ஐஸ் பூஷர் கப்பல் தங்​கள் துறை​முகத்​தில் நிறுத்​திக் கொள்ள இலங்கை அனுமதி அளித்​தது. அதில் இருந்த 208 வீரர்​களும் இலங்கை கடற்படை முகாமில் உள்​ளனர்.

இந்தியர்களுக்கு உதவி: ஈரான் போர் காரண​மாக மேற்கு ஆசிய நாடு​களில் வசிக்​கும் சுமார் 1 கோடி இந்​தி​யர்​களின் பாது​காப்​பில் மத்​திய அரசு அக்​கறை செலுத்​துகிறது. ஈரானின் ட்ரோன் மற்​றும் ஏவு​கணை தாக்​குதலுக்கு உள்​ளான சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம், ஓமன், கத்​தார், பஹ்ரைன் ஆகிய நாடு​களில் சிக்கியுள்ள இந்​தி​யர்​களுக்​குத் தேவை​யான உதவியை இந்​திய தூதரக அதி​காரி​கள் செய்து வரு​கின்​றனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை மேற்கு ஆசிய நாடு​களில் இருந்து 67,000 இந்தியர்கள் நாடு திரும்​பி​யுள்​ளனர்.

வர்த்தக கப்​பல்​கள் மீது நடத்​தப்​படும் தாக்​குதலும் கவலையளிக்கிறது. இதில் இந்​தி​யர்​கள் அதி​கம் பணி​யாற்​று கின்றனர். ஏற்​கெனவே நாம் 2 இந்​திய மாலுமிகளை இழந்​து​விட்டோம். ஒரு​வரை காண​வில்​லை. ஈரானுக்கு இந்​திய மாலுமிகளை அனுப்ப வேண்​டாம் என கப்​பல் நிறு​வனங்​கள் கேட்டுக் கொள்​ளப்பட்​டுள்​ளன. ஈரான் – அமெரிக்கா போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வர வேண்​டும் எனவும், அதுகுறித்​த முயற்​சிக்​கு இந்​தி​யா ஆதர​வளிக்​கிறது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here