Home மாநில செய்திகள் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு: 15,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு: 15,000 கனஅடியாக குறைப்பு

0

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு நேற்று முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப் பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று முன்தினம் வரை விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே, டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கான நீர் தேவை குறைந்தது.

எனவே, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு நேற்று காலை முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கான நீர் திறப்பு விநாடிக்கு 500 கனஅடியாக நீடிக்கிறது.

இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,256 கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்று 6,251 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர் இருப்பு 83.14 டிஎம்சியாக இருந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version