ஐடி ஊழியர் கொலைக்கு விசிக கண்டனம்: சாதிய கொலைகளை தடுக்க சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தல்

0
114

​திருநெல்​வேலி​யில் ஐடி ஊழியர் சாதிய படு​கொலை செய்​யப்​பட்ட சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்டனம் தெரி​வித்​துள்​ளனர். பாளை​யங்​கோட்​டை​யில் ஐடி ஊழியர்கவின் சாதிய படு​கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இச்​சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்து விசிக தலை​வர் திரு​மாவளவன் விடுத்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த கொடூர சாதிய கொலைக்கு உடந்​தை​யாக இருந்த பெண்​ணின் பெற்​றோரை உடனடி​யாக கைது செய்ய வேண்​டும். அவர்​களை காவல் ​துறை பணியி​லிருந்து நிரந்​தர​மாக நீக்க வேண்​டும்.

மேலும் இவ்​வழக்கை சிறப்பு புல​னாய்​வுக் குழு​வுக்கு மாற்ற வேண்​டும். ஆதிக்க சாதிவெறி​யாட்​டத்​தைத் தடுப்​ப​தற்கு காவல் ​துறை​யில் ஒரு தனி நுண்​ணறி​வுப் பிரிவை உரு​வாக்க வேண்​டும் என்​னும் கோரிக்​கையை மீண்​டும் மீண்​டும் முன்​வைக்​கிறோம். சாதிய கொலைகளைத் தடுப்​ப​தற்​கான சட்​டத்தை இந்​திய சட்ட ஆணை​யம் வடிவ​மைத்து பல ஆண்​டு​களாகி​யும் இன்​னும் நிறைவேற்​றப்​ப​டா​மல் இருக்​கிறது.

சாதிய கொலைகளைத் தடுப்​ப​தற்​கான சட்​டத்தை உடனடி​யாக மாநில அரசு உரு​வாக்க வேண்​டும். கவினை இழந்​து​வாடும் அவரது குடும்​பத்​தினருக்கு உரிய இழப்​பீடு, குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை​யும் வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

புதிய தமிழகம் கட்​சித் தலை​வர் கிருஷ்ண​சாமி விடுத்த அறிக்​கை​யில், “இச்​சம்​பவத்​துக்கு காரணம் மேலா​திக்க சாதித் திமிரைத் தவிர வேறெது​வும் இல்​லை. சம்​பந்​தப்​பட்ட பெண் உட்பட ஒட்​டுமொத்த குடும்​பத்​தினரும் கைது செய்​யப்​பட்​டு, ஒரு மாதத்​துக்​குள் குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​யும் வகை​யில் வழக்கை விரைவுபடுத்த வேண்​டும்.

இக்​கொடூரப் படு​கொலை​யைக் கண்​டித்​து, புதிய தமிழகம் கட்சி சார்​பில், திருநெல்​வேலி ரயில் சந்​திப்​பில் நாளை (ஜூலை 31) காலை 11.30 மணிக்கு மாநில இளைஞரணித் தலை​வர் ஷியாம் கிருஷ்ண​சாமி தலை​மை​யில் ஆர்ப்​பாட்​டம்​ நடை​பெறும்​” என தெரி​வித்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here