பிஹார் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஜன்சுராஜ் கட்சியைச் சேர்ந்த துலர்சந்த் யாதவை கொலை செய்த ஐக்கிய ஜனதா தள முன்னாள் எம்எல்ஏ ஆனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கான்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் வன்முறைகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. பிஹாரில் அமைதியான, சுந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய ஏராளமான காவல் துறை அதிகாரிகள், தேர்தல் அலுவலர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் என அனைவரும் அயராத பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தல் உலகம் முழுவதற்கும் ஓர் அளவுகோலாக அமையும் என்று பிஹார் மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.
அனைவரும் பயமின்றி தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்க வர வேண்டும். மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.














