வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (50). இவர் பந்தல் அமைக்கும் வேலைக்கு சென்று வந்தார். இவருடைய மனைவி மீனா (49). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்களுடன் கதிர்வேலின் தாயாரும் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கதிர்வேலின் தங்கை மகன் அஸ்வின் (23) என்பவர் அடிக்கடி மது போதையில் கதிர்வேலின் தாயாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 10-ம் தேதி அஸ்வின் கதிர்வேலின் வீட்டிற்கு சென்றார். அப்போது கதிர்வேல் தனது தாயிடம் தகராறு செய்து தொடர்பாக அஸ்வினை கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அஸ்வின் கதிர்வேலின் தலையை பிடித்து கருங்கல்லில் மோத வைத்து கீழே தள்ளி விட்டுள்ளார். தலையில் பதத்த காயம் அடைந்த கதிர்வேலை உறவினர்கள் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கதிர்வேல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மீனா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அஸ்வினை கைது செய்தனர்.














