வில்லுக்குறி:   சாலையோரம் எரிக்கப்படும் இறைச்சி கழிவுகள்

0
182

வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகம் முன்பிலிருந்து பரிசேரி சாலை செல்கிறது. இதில் குதிரைபந்தவிளை கால்வாய் செல்லும் சாலையின் ஓரம் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடம் அருகில் சமீப காலமாக குப்பை கழிவுகளை மக்கள் கொட்டி வருகின்றனர். இரவு மற்றும் பகல் நேரங்களில் ஆட்டோ, பைக்கில் வந்து குப்பைகளை கொட்டி சென்று விடுகின்றனர். 

பிளாஸ்டிக், உணவு கழிவுகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கிடையே சமீபகாலமாக இந்த பகுதியில் மாமிச கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படும் சம்பவம் நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தெரு நாய்களும் அதிக அளவில் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை பேரூராட்சி செயலாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. கலெக்டர் உத்தரவிட்டும் கண்டுகொள்ளவில்லை. எனவே அந்த பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றுவதில் உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here